சாணக்கிய நீதி - உங்களுக்கு பிடித்தவர்களிடமிருந்து உங்களை தள்ளிவைக்கும் 5 பழக்கங்கள்
சாணக்கிய நீதி
சாணக்கிய நீதியின்படி, உங்களின் சில பழக்கவழக்கங்கள் உங்களை உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து பலித்துவைக்கும் எனப்படுகின்றது.

குறிப்பிட்ட இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு பிடித்த யாராக இருந்தாலும் அவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள் எனப்படுகின்றது.
இதனால் நீங்கள் எப்போதும் தனிமைப்படுத்தப்படுவீர்கள். எத்தனை பேர் உங்களுககு சொந்தமாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் அவர்களால் ஒதுக்கப்படுவீர்கள் என்று சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு இந்தப் பழக்கங்கள் இருந்தால், அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இதை நீங்கள் தெரியாமல் இதுவரை செய்துகொண்டு இருந்தால் பதிவை படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள்.

சுயநல குணம்
சுயநலத்திற்காக உறவுகளை உருவாக்குபவர்கள், காலப்போக்கில் அவற்றை முறித்துக்கொள்வது உறுதி என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் விளக்குகிறார்.
தன்னுடைய ஏதோ ஒரு சுயநல காரணத்திற்காக குறிப்பிட்ட சிலரை தங்களின் உறவாக்கி கொள்ளும் போது அந்த உறவு நீடிக்காதாம்.

தகவல் தொடர்பு பற்றாக்குறை
- தகவல் தொடர்பு இல்லாத உறவுகள் முறிந்து போவது உறுதி. நாம் ஒரு உறவில் இருக்கும் போது மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும் அவர்களைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமலும் அவர்களைப் புரிந்துகொள்ளாமலும் நீங்கள் உங்களைப் பற்றியே யோசித்தால் அவருக்கு உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்.
கோபம்
- கோபம் உங்களை எரிக்க கூடிய ஒரு ஆயுதம். இந்த கோபம் நிலைபெற்ற உறவுகளைக் கூட அழித்துவிடும். எனவே, எந்தவொரு உறவையும் வலுப்படுத்த, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கோபம் வந்தால் கூட அதை உங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்ட பழகாதீர்கள்.
அகங்காரம் உறவுகளை முறிக்கிறது
- அகங்காரம் உங்களிடம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களை விட்டு விலகியே இருப்பார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களை மற்றவர்களை விட உயர்ந்தவராகக் கருதுவதும், உங்களை நீங்களே தொடர்ந்து புகழ்ந்து கொள்வதும் ஒரு தீய பழக்கமாகும். இந்தப் பழக்கம் உங்களுக்கு நெருக்கமானவர்களை உங்களை விட்டு வெகுதூரம் விலக்கிவிடும்.
ஒருபோதும் துரோகம் செய்யாதே
- நம்பிக்கை என்பது கண்ணாடி போன்றது. அது உடைந்தால், உறவில் ஒருபோதும் ஆறாத விரிசலை ஏற்படுத்திவிடும் என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். துரோகம் செய்பவருடன் யாரும் நெருக்கமாக இருக்க விரும்ப மாட்டார்கள். மேலும் அத்தகையவர்கள் கூட்டத்தில்கூட பெரும்பாலும் தனிமையை உணர்கிறார்கள். எனவே, உங்கள் உறவுகளை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் ஒருபோதும் யாருக்கும் துரோகம் செய்யக்கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).