நாட்டையே உலுக்கிய 6 வயது சிறுமி கொலை வழக்கு! தண்டவாளத்தில் சடலமாக கிடந்த கொலையாளி
கடந்த நாட்களுக்கு முன்பு இந்தியாவில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர்கள் கொலைகாரனை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், குற்றவாளியை போலீசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான்.
மேலும், போலீசார் தீவிர வேட்டையில் சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான ராஜூயையும் போலீசார் தேடி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், #JusticeForChaithra என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் தொடர்ந்து டிரண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், கொடூரன் ராஜூ கன்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் சடலமாக கண்டுப்பிடித்துள்ளனர். இந்த தகவலை அமைச்சர் கே.டி.ஆர் உறுதி செய்துள்ளார். எதற்காக தற்கொலை செய்துகொண்டான் என விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
#AttentionPlease : The accused of "Child Sexual Molestation and murder @ Singareni Colony, found dead on the railway track, in the limits of #StationGhanpurPoliceStation.
— DGP TELANGANA POLICE (@TelanganaDGP) September 16, 2021
Declared after the verification of identification marks on deceased body. pic.twitter.com/qCPLG9dCCE