வெற்றிலை சாப்பிட்டால் கொரோனா நோய் சரியாகிவிடுமா? வெளியான உண்மை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றிலை சாப்பிடுவது கொரோனா குணப்படுத்தாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க அடிக்கடி கை கழுவுவது, முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்றுவது அவசியம்.
வெற்றிலையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸை அழிக்க முடியாது. வெற்றிலையை சாப்பிட்டால் கொரோனா ஒழியும் என்று வெளியாகியுள்ள தகவல் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக பல்வேறு ஊடகங்களில் வெற்றிலையை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்று செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.