நடிகைகளுக்கு மேக்கப் போடும் போது இவர் தான் அதிகமான சப்போர்ட் பண்ணுவார்..நேர்காணலில் உடைக்கப்பட்ட உண்மை!
பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு மேக்கப் போடும் போது என்னுடைய கைகள் நடுங்கும் என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் தன்னுடைய அழகை கொஞ்சம் உயர்த்தி காட்டுவதற்காக மேக்கப் போட்டு கொள்வார்கள்.
அதிலும் பெண்களை சொல்லவே தேவையில்லை. மேக்கப் இல்லாமல் சில நடிகைகள் வெளியில் கூட வரமாட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மீனா, சினேகா, ராதிகா உள்ளிட்டோர் எவ்வாறு மேக்கப் போடுவார்கள். அவர்களுக்கு யார் மேக்கப் போட்டு விடுவது என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
இதன்படி, நடிகைகளை அழகாக காட்டும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி அவர்கள் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை கொடுத்திருந்தார்.
அதில், "மீனாவிற்கு மேக்கப் போடுவது மிகவும் இலகு. அவர் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் மிகவும் மென்மையானவர். அடுத்ததாக சினேகா, இவர் அவருக்கு அவரே மேக்கப் போட்டு கொள்வார்.

இவருக்கான ஹேயர் ஸ்டைல் மட்டும் தான் இன்னொருவர் போட வேண்டும்.” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போடும் போது அதில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்கள் குறித்து மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி பகிர்ந்துள்ளார்.அதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.