தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை.... டைரியில் எழுதி வைத்திருந்த அதிர்ச்சி தகவல்
பிரபல கன்னட நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜெயஸ்ரீ ராமய்யா சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் செய்து கொண்டார். மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெயஸ்ரீயின் டைரியில் அவர் எழுதியிருந்த விடயங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதில் தான் செய்த தவறு கள் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எனது மாமனார் கிரிஷை நான் தொந்தரவு செய்துள்ளேன். அவர் மீது சில பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளேன், எனது மாமியார் மற்றும் குடும்பத்தினர் அளித்த பல பரிந்துரைகளை ஏற்கத் தவறிவிட்டேன். எனது மாமியார் பற்றி பல பொய்களை ஊடகங்களுக்குச் சொல்லி அவரை சிக்கலில் ஆழ்த்தினேன்.
அவரது பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்தேன், ஆனால் நான் எனது சொந்த பெயரைக் கெடுத்து கொண்டேன். என் பிரச்சினைகளுக்கு நானே காரணமே தவிர என் மாமனார் கிடையாது நான் ம ன அழுத்தத்தில் இருந்து வெளியில் வர அவர் உதவினார்.
என் தோல்விக்கு நானே காரணம், என்னை மன்னித்துவிடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சொத்துக்காக வீட்டிலிருந்து மாமனார் துரத்தியடித்தார் என ஜெயஸ்ரீ பொலிசில் புகார் அளித்திருந்தார்
இப்போது டைரியில் அவர் எழுதியுள்ளதை வைத்து பார்க்கும் ஜெயஸ்ரீ முன்னர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவருகிறது.