கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ஹிட் படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி - 2, அண்ணாத்த, சர்கார் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை குறுகிய காலத்திலேயே ஏற்படுத்திக்கொண்டவர்.
தற்போது கீர்த்தி ஹிந்தியில் அறிமுகம் ஆகும் பேபி ஜான் திரைப்பம் அட்லி தயாரிப்பில் இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 25 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
நீண் காலமாகவே கீர்த்தியின் திருமணம் தொடர்பில் பல்வேறு வதந்திகள் இணையத்தில் அவ்வப்போது தோன்றி மறைவது வழக்கம். ஆனால் கீர்த்தி எதற்கு வாய்திறக்கவே இல்லை.
மீடியாவின் கண்களில் படாமல் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இருவீ்ட்டார் சம்மதத்துடன் அண்மையில் கோவாவில் நடைபெற்றது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாக ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |