தண்ணீர் எப்போது மருந்தாக, விஷமாக மாறும்? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
பொதுவாக இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொரு ஜீவராசியும் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமாகும்.
பூமியில் இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
“ தவறான நேரத்தில் தண்ணீர் குடிப்பது எப்படி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என தத்துவஞானி சாணக்கியர் கூறுகிறார்.
இவர், மனிதர்களுக்கு என்னென்ன பழங்கள் இருக்க வேண்டும். அதனை முறையாக கடைபிடிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதனை நமது வாழ்க்கையுடன் ஒப்பிடும் பேசுவதில் திறமையானவராக இருந்துள்ளார்.
அப்படியாயின் மனிதர்கள் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால் ஆபத்தாக அமையும் என சாணக்கியர் கூறுகிறார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர் விஷமாக மாறுமா?
செரிமானமின்மையால் அவஸ்தைப்படும் நபர் ஒருவர் அந்த சமயத்தில் தண்ணீர் குடித்தால் அது மருந்து. அதே போன்று வயதானவர்களுக்கு தண்ணீர் தான் பெரிய வலிமையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது விஷம் என சாணக்கியர் கூறுகிறார்.
அதாவது, சாப்பிடும் போது இடையிடையே சிறிதளவு தண்ணீர் குடிப்பது நன்மையாக பார்க்கப்படுகின்றது. ஏனெனின் சிலருக்கு போதியளவு நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும், அந்த சமயம் கொஞ்சமாக தண்ணீர் குடித்து குடித்து தான் சாப்பிட வேண்டும். இப்படியான நேரங்களில் தண்ணீர் அமிர்தம் போல் இருக்கும்.
அதே போன்று சிலர் சாப்பிட்ட பின்னர் அதிகமான தண்ணீர் குடிப்பார்கள், இது முற்றிலும் தவறான பழக்கமாக மருத்தவர்கள் கூறுகின்றனர். சாப்பிட்டு முடித்து சரியாக 30 நிமிடங்களுக்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லப்படுகின்றது. தவறும் பொழுது செரிமான பிரச்சினைகள், மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |