Carrot Omelette: சத்துக்களை அள்ளித்தரும் காரட் ஆம்லேட்
முட்டை மற்றும் காரட் இரண்டிலும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது என நம் அனைவருக்குமே தெரியும்.
காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைக்கு நல்லது, முட்டையில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
காலை மற்றும் மாலை வேளைகளில் காரட் ஆம்லேட் எடுத்துக்கொள்வது வயிற்றுக்கு நிறைவான உணர்வை வழங்குவதுடன் ஊட்டச்சத்தையும் அளிக்கிறது.
தேவையான பொருட்கள்
கேரட்- 2 (துருவியது)
முட்டை- இரண்டு
வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- தேவையான அளவு
பச்சை மிளகாய்- 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும், இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும், அடுப்பை அணைத்த பின்னர் பாத்திரத்தில் இந்த கலவையை மாற்றிக் கொண்டு இதனுடன் முட்டை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
கடைசியில் தவாவில் ஆம்லேட்டுகளை போட்டு எடுத்தால் சத்தான காரட் ஆம்லேட் தயார்!!
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.