தானாக அசைந்த மைக்ரோவேவ்! பதறிய பெண்ணிற்கு கிடைத்த பேரதிர்ச்சி
சமையலறையில் இரண்டு ராட்சத பாம்புகளைக் கண்ட பெண் அப்பாம்பின் காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சமையலறையில் பாம்பு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், பெண் ஒருவர் தனது சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது சமையலறையில் இருந்த மைக்ரோவேவ் தானாக அசைவதைக் கண்டுள்ளார்.
உடனே அருகே சென்று அவதானித்த அவர் ராட்சத பாம்பின் வால் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, மைக்ரோவேவ் பின்னே இரண்டு பாம்புகள் இனச்சேர்க்கையில் இருப்பதை அவதானித்துள்ளார்.
பின்பு பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்து காட்டுக்குள் விடப்பட்டுள்ளது. இக்காட்சியினை குறித்த பெண் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...