புற்றுநோய் வரவழைக்கும் உணவுகள் - சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க
புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுப் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
புற்றுநோய் வரவைக்கும் உணவுகள்
நமது உடலில் கட்டுப்பாட்டை மீறி அசாதாரண செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதே புற்றுநோய் எனப்படும். இந்த புற்றுநோயை அறுவை சிகிச்சை, கீமோ, ரேடியேஷன் போன்ற சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இந்த நோய் வந்தால் விவரிக்க முடியாத எடை இழப்பு, நீண்டகால சோர்வு, அசாதாரண வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
இந்த நோய் தொடர்பில் மோசமான உணவுமுறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக டஃப்ட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் நாம் சாப்பிடும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த உணவுகள் பற்றி பார்க்கலாம்.

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது - சமைக்கும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது டிஎன்ஏ சேதம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. இது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை அதிகரிக்கும் இதனால் புற்றுநோய் வரும்.
கிரில் உணவுகள் - அதிகமாக கிரில் செய்யப்பட்ட உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். காரணம் இதில் புற்றுநோயை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை அதாவது (HCAs, PAHs) அதிகமாக இருக்கும். இது பெருங்குடல் மற்றும் கணைய புற்றுநோயுடன் தொடர்புடையது.

பேக்கன் - சாசேஜ்கள், பேக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தினமும் சிறிதளவு சாப்பிட்டாலும் ஆபத்து அதிகம். இவற்றில் உள்ள பதப்படுத்திகள் புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்களாக மாறுகின்றன. இது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் - அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை. காரணம் இவற்றை தொடர்ந்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை பாதித்து, வளர்சிதை மாற்ற அழுத்தத்தை அதிகரிக்கும்.
பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவை சேமிப்பது - பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவை சேமிப்பது BPA, தாலேட்ஸ் போன்ற ரசாயனங்கள் உணவில் கலக்க காரணமாகிறது. நீண்டகால பயன்பாடு ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |