கனடாவை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் மொத்த உலகையும் சுற்றும் ஆச்சரியம்! பின்னணியில் கண்ணீர் காரணம்
கனடாவை சேர்ந்த குடும்பம் உலகம் சுற்றும் ஆச்சரியம்.
குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் கண்பார்வை பறிபோகவுள்ள நிலையில் பெற்றோர் நெகிழ்ச்சி செயல்.
கனடாவில் கண் பார்வையை இழக்கவுள்ள 3 குழந்தைகளை அவர்களின் பெற்றோர் உலக சுற்றுலாவுக்கு அழைத்து செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sebastien Pelletier - Edith Lemay தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். இதில் மகள் Mia மற்றும் மகன்களான Colin, Laurent ஆகிய மூவரும் Retinis pigmentosa என்ற அரியவகை கண் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
National Eye Instituteன் கருத்துப்படி, Retinis pigmentosa அறிகுறிகள் பொதுவாக குழந்தை பருவத்தில் தொடங்குகின்றன, மேலும் இதனால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இறுதியில் பார்வையை இழக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edith Lemay
இதையடுத்து தங்களது குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முன் உலகை சுற்றிக் காட்ட முடிவு செய்த தம்பதிகள், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே நமீபியா, ஜாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்ற இந்த குடும்பம், இப்போது இந்தோனேசியாவில் முகாமிட்டுள்ளது.
இந்த குடும்பம் சீனா மற்றும் ரஷ்யாவில் தங்கள் சுற்றுலாவை கடந்த 2020ல் தொடங்க நினைத்தனர். ஆனால் அப்போது கொரோனா பரவல் தொடங்கியதால் அந்த திட்டத்தை ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edith Lemay