டைட்டாக ஜீன்ஸ் அணிபவரா...உயிருக்கே ஆபத்து? இனி கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
உலகமயமாக்கலின் விளைவாக உணவு முதல் வாழ்க்கைமுறை வரை எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
அதில் பேஷன் என்பது அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது.
பேஷன் ஆடைகளில் ஆண் மற்றும் பெண் இருவருமே விரும்பி அணியும் உடை தான் ஜீன்ஸ்.
இளம் வயதினருக்கு ஜீன்ஸை டைட்டாக அணிவது மிகவும் பிடிக்கும்.
இறுக்கமான ஜீன்ஸ் ஆபத்து...?
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடல்நலத்தை பாதிக்கும் என சில காலமாக கூறப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜீன்ஸை மிகவும் இறுக்கமாக அணிவது டெஸ்டிகுலர் கேன்சர் அதாவது விந்தக புற்று நோயை ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
டைட்ஸ் அல்லது கால்களை இறுக்கிப் பிடித்ததுபோல அணியும் ஜீன்ஸ் உங்களுடைய உடலின் வடிவத்தை அழகு படுத்திக் காட்டும்.
ஆனால் அழகு சில நேரங்களில் உடலுக்கு ஆபத்தாகி விடுவதுண்டு.
பொதுவாகவே இறுக்குமான ஆடைகளை அணியும் போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
குறிப்பாக, இடுப்பு பகுதி முதல் கால் வரை ஜீன்ஸை டைட்டாக அணிவது உடலின் கீழ் பகுதியில் ரத்த ஓட்டத்தை பாதித்து கால்கள் மற்றும் பாதங்களை பலவீனமாக உணர வைக்கும்.
ரத்த ஓட்டத்தை தடை படுத்துவதோடு மட்டுமன்றி, இறுக்கமான ஆடைகள் தொடர்ந்து உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கும்.
அவ்வப்போது அசௌகரியமாக உணரும் போது கால்களை லேசாக தளர்த்திக்கொள்ளக்கூட இடமில்லாத அளவுக்கு இறுக்கமான ஜீன்ஸை அணியும் போது வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மரத்துப் போதல் மற்றும் தொடைகளில் ரத்தக்கட்டு, ஆகியவை உண்டாகும்.
ஆண்கள் நீண்ட நேரத்திற்கு டைட்டான ஜீன்ஸ் அணிவது அல்லது தினசரி டைட் ஜீன்ஸ் அணிவது நல்லது டெஸ்டிகுலர் கேன்சர் பாதிப்பை ஏற்படுத்தும்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வு நிபுணர்களின் கூற்றின் அடிப்படையில் இடுப்பில் இருந்து கால்கள் வரை டைட்டான ஆடைகளை அணிவது, உடலின் கீழ் உள்ள பகுதியில் இருக்கும் வெப்பநிலை அதாவது உடல் உஷ்ணத்தை அதிகரித்து விந்துப் பைகளை பாதிக்கும்.
இதனால் விந்தணுக்களின் உற்பத்தி தடைப்படும் மற்றும் எண்ணிக்கையும் குறையும்.
மேலும் இதன்மூலம் விந்துப்பை புற்றுநோய் உண்டாகும் அபாயமும் அதிகரிக்கும்.
எனவே ஆண், பெண் இருவரும் இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும் வனையில் ஜீன்ஸ் அணிய வேண்டாம்.