அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலே அதிர்ஷ்டம்
அட்சய திருதியையான இன்று தங்கம் வாங்கமுடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் வீட்டிற்கு இந்த 10 ரூபாய் பொருட்களை வாங்கி வைத்தாலே அதிர்ஷ்டம் பெருகுமாம்.
அட்சய திருதியை
அட்சய என்பதற்கு குறையாதது அல்லது வளரக்கூடியது என்று பொருள் ஆகும். இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பலமடங்கு அதிகமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
ஆதலால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால், இந்நாளில் தங்கத்தினை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் பலரும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு நினைப்பவர்கள் வெறும் 10 ரூபாய் பொருட்களை வாங்கி வைத்தால் வீட்டில் அதிர்ஷ்டம் பெருகுமாம்.

என்னென்ன பொருட்களை வாங்கலாம்?
மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படும் கல் உப்பை வீட்டில் வாங்கி வைப்பது, தங்கம் வாங்கி வைப்பதற்கு இணையான பலனைக் கொடுக்குமாம். இவை நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது.
அதே போன்று மங்களகரமான பொருளாக பார்க்கப்படும் மஞ்சள், குங்குமம் இவற்றினையும் வீட்டிற்கு வாங்கி செல்லலாம். ஏனெனில் இவை வீட்டின் லட்சுமி கடாட்சத்தை தக்கவைக்கின்றது.

மேலும் பருப்பு மற்றும் அரிசி போன்ற உணவு பொருட்களையும் அட்சய திருதியை அன்று வாங்கி வைக்கலாம். இவையும் வீட்டிற்கு அருளை கொடுப்பதுடன், ஆண்டு முழுவதும் உணவிற்கு பஞ்சம் இல்லாம் இருக்குமாம்.
மல்லிகை பூ மற்றும் வாசனை பொருட்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த நறுமண பொருள் என்பதால் இவற்றினை வாங்கி இறைவனுக்கு வழிபடலாம். இவையும் செல்வ செழிப்பை ஏற்படுத்துகின்றது.

புதிய ஆடைகள், குடைகள் இவற்றையும் வாங்கி வைத்தால் வீட்டில் செல்வம் பெருக்கும். ஆகவே அட்சய திருதியை அன்று இதனையும் வாங்கலாம்.
அதுமட்டுமின்றி வெள்ளிக்காசு, மண்பானை, புத்தகம் மற்றும் பேனா இவற்றையும் வாங்கி வைப்பது அட்சய திருதியை அன்று ஆசீர்வாதத்தினை அளிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |