தைராய்டு பிரச்சனை இருந்தால் பப்பாளி சாப்பிடலாமா?
இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பப்பாளி சாப்பிடலாமா என்பதை மருத்துவ நிபுணர் விளக்கத்துடன் பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி பழங்கள் இதய நோயாளிகள் சாப்பிடலாமா?
குறிப்பிட்ட சிலர் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு முடித்ததற்கு பின்னர் பப்பாளி பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இதில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும். பப்பாளி வைட்டமின் A, C, E, நார்ச்சத்து, மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த ஒரு சத்தான பழமாகும்.

இது செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய ஆரோக்கியம், எடை குறைப்பு மற்றும் சரும பொலிவு ஆகியவற்றிற்கு சிறந்தது.
குறிப்பாக, இதில் உள்ள பப்பைன் நொதி செரிமானத்திற்கு மிகவும் நன்மை தரும். மேலும் இதில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது.
ஆனால் இதில் எவ்வளவு நன்மைகள் இருப்பினும் இது எல்லோரும் சாப்பிட ஏற்ற பழம் இல்லை. பொதுவாக இதய நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடலாமா என்பதை பதிவில் பார்க்கலாம்.

யாரெல்லாம் சாப்பிட கூடாது?
கர்பிணிகள் - கர்ப்பிணிகள் பப்பாளி பழம் சாப்பிடவே கூடாது இல்லை. ஆனால் பழுக்காத மற்றும் பாதி பழுத்த பப்பாளியை பெண்கள் சாப்பிடுவது கருப்பையை சுருக்க நேரிடும். இதனால் குறை பிரசவம் வரலாம்.
தைராய்டு - பப்பாளியை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம் தைராய்ட் ஹார்மோன் சுரப்பில் இது பாதிப்பை உண்டாக்குமாம். இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும்.

இதய பிரச்சனை உள்ளவர்கள் - பப்பாளியில் இதய நரம்புகளின் வீக்கத்தை குறைக்கும் சக்தி எள்ளது. ஆனால் ஏற்கனவே இதயநோயால் பாதிக்கபட்டவர்கள் பப்பாளியை சாப்பிட கூடாதாம். காரணம் நாம் இதய நோய்க்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பப்பாளியில் சரப்பியால் வீரியமடையும்.
சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் - பப்பாளியில் இதிக வைட்டமின் சி உள்ளது. இது சிறுநிரகத்தில் கற்களை உருவாக்க நேரிடும். சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இந்த பப்பாளியை குறைவாக உட்கொள்வது நவல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |