குளிர்காலத்தில் வந்தாச்சு.. தொற்றுகளிலிருந்து சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?
தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது இருக்கும் சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளது.
வழக்கமாக குளிர்காலம் வந்து விட்டால் தொற்றுகள் அதிகமாக பரவும். அத்துடன் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக சிலர் நோய் வாய்ப்படலாம். உடலில் சளி அதிகரிக்கும் பொழுது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அபாயம் ஏற்படலாம். இதனால் சிறுநீரக நோய்கள் ஏற்படலாம்.
அந்த வகையில் குளிர்காலங்களில் சிறுநீரகங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் இவற்றை மறக்காதீர்கள்..
1. இந்தியா முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ளது. இந்த காலப்பகுதியில் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும்.
2. சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கும் இந்த காலப்பகுதியில் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
3. டயட்டில் இருப்பவர்கள் சுத்தமான பழங்கள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் காய்கறிகளை உப்பு போட்டு கழுவுவது அவசியம்.
4. மது அருந்தும் பழக்கம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் குளிர்காலத்தில் அதிலிருந்து விலகி இருப்பது சிறந்தது.
5. அநேகமானவர்கள் குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை பெரிதாக எண்ண மாட்டார்கள். ஆனால் இது உடல் நீரிழப்புக்கு ஆளாக்கும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் சிறுநீரகங்கள் பாதுகாக்கப்படும். நாள் முழுவதும் 8 கிளாஸ் தண்ணீர் வரை குடிக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |