வீட்டுக்கு வீடு விமானம்! அமெரிக்காவில் வியக்க வைக்கும் நகரம்.. எங்குள்ளது தெரியுமா?
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் புறநகர்ப் பகுதி கேமரான் ஏர்பார்க் எஸ்டேட்ஸ் (Cameron Airpark Estates). எனப்படும் பகுதியை விமான பார்க் நகரம் என்றும் fly-in community என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவருமே வீட்டில் கார் வைத்திருப்பது போல விமானம் ஒன்றை வைத்திருக்கின்றனர்.
இதனால் இந்த நகரத்தின் வீட்டில் வாசல் மற்றும் சாலைகளின் இருபுறமும் கார்கள் நிற்பது போல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சுற்று வட்டாரபகுதி மக்கள் தங்களின் சொந்த வேலைக்கும், அலுவலக வேலைகளுக்கும் இந்த கேரேஜ் எனப்படும் சிறிய ரக விமானத்திலேயே பயணிப்பதாக கூறப்படுகின்றது.
இந்த தெருக்களில் உள்ள சாலைகள் விமானிகள் விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்ல உதவும் வகையில் மிகவும் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் விமானங்களை இறக்கைகளால் தட்டாமல் இருக்க தெருப் பலகைகள் மற்றும் லெட்டர்பாக்ஸ்கள் வழக்கத்தை விட குறைவாகவே இங்கு வைக்கப்பட்டுள்ளது .
சுவாரஸ்ய கதை
அமெரிக்க ராணுவம் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, அமெரிக்கா ராணுவத்திற்கு அதிக விமானிகள் தேவைப்பட்டதால் அதன் ஏராளமான விமானிகளுக்கு பயிற்சி அளித்து போருக்கு தயார்ப்படுத்தியது .
இதனால் 1939 இல் 34,000 ஆக இருந்த விமானிகளின் எண்ணிக்கை, 1946 இல் 400,000 ஆக உயர்த்தப்பட்டது.
அதனால் விமானங்கள் எளிதாக பறக்கவும் தரையிறங்கவும் பெரிய சாலைகளும் ஏராளமான விமான நிலையங்களும் அமைத்தனர்.
போருக்கு பின் விமான நிலையங்கள் பயனின்றி போகக்கூடாது என்பதற்காக இந்த விமான நிலையங்களையும், விமானத்தையும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடியிருப்பு பகுதியாக மாற்றியமைத்தனர்.
அதன்படி உருவாகப்பட்டதே ஏர்பார்க் நகரம்.
கூடுதல் பாதுகாப்பு
இந்த ஏர்பார்க் தனியாருக்குச் சொந்தமானவை, வெளியாட்கள் அனுமதியின்றி சொத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் உரிமையாளர்கள் அவர்களை அழைத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கூடுதல் பாதுகாப்பு நகரமாக இருக்கின்றது.
[Q8LSZP