வீட்டுல முட்டைக்கோஸ் இருக்குதா? ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செய்து பாருங்க
முட்டைக்கோஸில் ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு உணவு மிகவும் அவசியமான ஒன்றாகும். பசிக்காக சாப்பிடும் உணவுகளை விட ருசிக்காக சில உணவுகளை செய்து சாப்பிடுவார்கள்.
அவ்வாறு உணவுப்பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்று தான் பிரியாணி. பிரியாணி என்றால் மட்டன், சிக்கன், முட்டை இவைகள் தான் ஞாபகம் வரும். அதுவே சைவத்தில் பனீர் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி என்று தான் செய்து சாப்பிடுவோம்.

ஆனால் சைவ பிரியர்களுக்கு முட்டைக்கோஸை வைத்து மணமணக்கும் பிரியாணியை செய்து சாப்பிடலாம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முட்டைக்கோஸ் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய முட்டைக்கோஸ் - 1 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
புதினா - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் - 2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அன்னாசிப் பூ - 1
பிரிஞ்சி இலை - 1
கல்பாசி - சிறிதளவு
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் கல்பாசி இவற்றினை சேர்த்து வதக்கவும்.
பின்பு வெங்காயத்தை வதக்கவும். நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் முட்டைகோஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்க வேண்டும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா இவற்றினை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இத்துடன் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் அரிசி, எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து நன்றாக கலந்து ஒருவிசில் விட்டு இறக்கவும். பின்பு பிரஷர் அடங்கியதும் அரிசி உடையாமல் மெதுவாக கிளறவும். அவ்வளவு தான் சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |