அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனை உள்ளதா? காரணம் இதுதானாம்
அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணம் என்ன என்பதையும் இதனை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான நபர்களுக்கு ஏப்பம் ஏற்படும் பிரச்சனை மிகப்பெரும் கஷ்டத்தினை ஏற்படுத்தும். அதாவது வாயு ஆங்காங்கே தேங்கி நிற்கும் நிலையில் இவ்வாறான பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
ஏப்பம் வருவதற்கான காரணங்கள்
சாப்பிடும்போது பேசுவது, அவசரமாக சாப்பிடுவது, கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பது, சூயிங்கம் மெல்லுதல் போன்ற காரணத்தினால் காற்று வயிற்றுக்குள் சென்று ஏப்பம் வருகின்றது.
அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப் புண் போன்ற செரிமானக் கோளாறுகளும் இந்த ஏப்பத்திற்கு காரணமாக அமைகின்றது.
பீன்ஸ், பருப்பு வகைகள், ப்ரோக்கோலி, பட்டாணி, வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கிழங்கு வகைகள் போன்ற வாயுவை உண்டாக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் அசௌகரியத்தை ஏற்படுத்தி ஏப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
சில மருந்துகள் மற்றும் குறிப்பாக வலி நிவாரணிகள், மலமிளக்கிகள் ஏப்பத்தை ஏற்படுத்தும். மேலும் மன அழுத்தம், பதற்றம் காரணமாகவும் இந்த ஏப்ப பிரச்சனை ஏற்படும்.
வராமல் தடுப்பது எப்படி?
சாப்பிடும் போது உணவை மெதுவாக சாப்பிட வேண்டும். காற்றடைத்த பானங்கள், சூயிங்கம், புகைப்பிடித்தல் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
வாயுவை உண்டாக்கும் உணவுகளை குறைவாக உண்ணவும். மன அழுத்தத்தினை குறைக்க வேண்டும்.
உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் கட்டாயம் இருக்க வேண்டும்.
அடிக்கடி ஏப்பம் வருவது ஒரு அறிகுறியாகும். இதன் பின்னணியில் உள்ள வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை அறிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |