கோழிக்கறி வாங்கப் போனவருக்கு கூரைய பிச்சிக்கிட்டு கொட்டிய அதிர்ஷ்டம்!
புத்தாண்டை முன்னிட்டு கேரள அரசு 32 கோடி(இலங்கை மதிப்பில்) பரிசுத்தொகை கொண்ட பம்பர் லாட்டரியை நடத்தியது.
இதில் எக்ஸ் ஜி 218582 என்ற லாட்டரிக்கு பம்பர் பரிசு அடித்தது.
கேரளத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சதானந்தன் தான் அந்த லாட்டரியை வாங்கியிருந்தார். அவர் பெயிண்டராக உள்ளார்.
வழக்கம்போல் காலையில் டீ குடிக்க வந்தவரிடம் அவரது மனைவி இறைச்சி வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.
அப்போது இறைச்சி கடைக்கு பக்கத்தில் லாட்டரி சீட்டைப் பார்த்துவிட்டு போகிற போக்கில் வாங்கியுள்ளார்.
அந்த லாட்டரிக்கு அன்று மதியம் குலுக்கலும் இருந்தது. அதில் இறைச்சி வாங்கப் போன சதானந்தனுக்கு 32 கோடி பரிசு அடித்தது.
சதானந்தன் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர். அப்போது இருந்தே பெயிண்ட் அடித்து வருகிறார். அவருக்கு நிறைய கடன் இருக்கிறதாம்.
இப்போது கிடைத்திருக்கும் பணத்தோடு ஒப்பிட்டால் அது சதாரண கடன். வெறும் 50 ஆயிரம் தான். அதை அடைப்பேன் என வெள்ளந்தியாகச் சொல்கிறார். கோழிகறி வாங்கப்போன ஏழைக்கு பணக்கார கடவுள் குபேரன் தேடி வந்து அதிர்ஷ்டத்தினை கொடுத்திருக்கின்றார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022