புதுவிதமான புல்டோசர் திருமணம்! இணையத்தை ஈர்க்கும் காணொளி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில் தனது திருமணத்தை மறக்கமுடியாத நாளாக மாற்ற மணமகன் மேற்கொண்ட ஒரு வித்தியாசமான நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
பொதுவாக திருமணம் என்பது ஒரு மறக்க முடியாத மிகப்பெரிய நாளாக செய்ய வேண்டும் என்பது அனைவரது கனவாக இருக்கும். மணமகன் மற்றும் மணமகள் இருவரின் குடும்பத்தினரும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தங்களால் இயன்றதைவிட அதிகமாக செலவிடுகிறார்கள்.
இந்த திருமண நிகழ்வில் ஊர்வலம் செல்வது ஒரு வழக்கமாகும். அது பற்றிய வீடியோ தான் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று முன்னால் செல்வதை காணலாம்.
அந்த காருக்குப் பின்னால் வேறு எந்த வாகனமும் இல்லை. இருப்பினும் புல்டோசர் அதுவும் ஒன்று அல்லது இரண்டு அல்ல டஜன் கணக்கிலான புல்டோசர்கள் உள்ளன.
அதாவது மணமகனின் காருக்குப் பின்னால் புல்டோசர்கள் அணியாக வருகின்றன. இந்த புல்டோசர்கள் எல்லாம் திருமண ஊர்வலத்திற்காக வந்தவையாகும். இந்த ஊர்வலத்தை நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்தனர்.
यह भी खूब रही…बुलडोजर की बारात........!!
— Krishna Kumar Yadav (@kkyadava) February 23, 2025
तेज आवाज में DJ पर बजता म्यूजिक, पीछे-पीछे कार में दुल्हा-दूल्हन और उनके पीछे बुलडोजर की लंबी लाइन। #buldozer #wedding #Jhansi #UttarPradesh pic.twitter.com/dK3aoQ23lj
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |