வீட்டில் குருவி கூடு கட்டினால் சுபமா அசுபமா?
வீட்டில் குருவி கூடு கட்டினால் அது சுபமா அசுபமா என்பது பற்றி ஜோதிடம் என்ன சொகிறது என்பதை பார்க்கலாம்.

வீட்டில் குருவி கூடு கட்டுதல்
பொதுவாக வாஸ்து சாஸ்திரம் படி நமக்கு பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது வீட்டில் நிம்மதி செல்லம் மகிழ்ச்சியை நிறுவ முடியும் என்று கூறப்படுகின்றது.
இந்த மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் எல்லோரது வீட்டிலும் குருவி கூடு கட்டி பார்த்திருப்போம்.
ஆனால் வாஸ்துபடி இது சுபமா அல்லது அசுபமா என்பதை நாம் யோசித்துள்ளோமா? அந்த வகையில் வாஸ்துபடி வீட்டில் குருவி கூடு கட்டுவது சுபமா அசுபமா என்பதை பார்க்கலாம்.

ஜோதிட விளக்கம்
இந்து மதத்தில், மரங்கள், செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்திலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம்.
அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள், ஆள் புழக்கம் இல்லாத பகுதிகளில் பொதுவாக கூடு காட்டும். இதை பார்த்து பல முறை நாம் ரசித்திருப்போம்.

அந்த வகையில் ஜோதிடத்தின்படி நமது வீட்டில் திடீரென குருவிகள் கூடு கட்டினால் வீட்டிற்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் வரப்போகின்றது என்று அர்த்தமாம்.
புறா லட்சுமி தேவியின் பக்தராகக் கருதப்படுகிறது. அதனால் தான் வீட்டில் புறா கூடு வைப்பது மங்களகரமானது என கூறப்படுகின்றது. புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும் என்பது நம்பிக்கை.
வீட்டில் பறவைகள் அல்லது குருவிகள் கூடு கட்டுவது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு மங்களகரமானது என்று கூறப்படுகின்றது.

வீட்டில் தென்மேற்கு திசையில் கூடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என வாஸ்து மூலம் கூறப்படுகின்றது.
இது வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கவும் உதவும் எனப்படுகின்றது. இவ்வளவு சிறப்புக்களை கொண்டிருக்கும் குருவி கூடு வீட்டில் இருந்தால் அகற்றாமல் நாம் பராமரிப்பது அல்லது தொந்தரவு செய்யாமல் விடுவது அவசியம். அப்போ தான் வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும் என வாஸ்து கூறுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |