ஆரம்பமாகிய புதன் நட்சத்திர பெயர்ச்சி... அபார வெற்றியை பெறும் 3 ராசியினர் யார்?
புதன் நட்சத்திர பெயர்ச்சியினால் அபார வெற்றியினை பெறும் மூன்று ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதன் நட்சத்திர பெயர்ச்சி
புதன் நட்சத்திர பெயர்ச்சி இன்று நடைபெற்றுள்ளது. விசாக நட்சத்திரத்தில் புதன் பெயர்ச்சி அடைந்துள்ளார். நவம்பர் மாதம் வரை சில ராசியினருக்கு வெற்றியும் கிடைக்கும்.
பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் நட்சத்திர மற்றும் ராசி மாற்றத்தினால் பல மாற்றங்கள் ஏற்படும் நிலையில், நவம்பர் 3ம் தேதி வரை விசாக நட்சத்திரத்தில் புதன் நிலைத்திருக்கின்றார்.
விசாக நட்சத்திரத்தின் அதிபதியாக குரு இருக்கும் நிலையில், 12 ராசியினருக்கு அற்புத பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் நவம்பர் 3ம் தேதி வரை நேர்மறையான ஆற்றலை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
புதன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினருக்கு நினைத்த காரியம் நிறைவேறும் நிலையில் வெற்றி வாய்ப்புகளும் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு கிடைப்பதுடன், மனதில் நினைத்ததை செய்து முடிப்பதுடன், தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களும் உதவி செய்கின்றனர்.
குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் நிலையில், புதிய முதலீடுகளில் கவனம் தேவை. கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கின்றது. குடும்பிரச்சனைகள் தீர்வதுடன், விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியினால் புதிய வழிகள் திறப்பதுடன், பணியில் இருப்பவர்களுக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்குமாம்.
கடின உழைப்பிற்கான பலனை பெறுவதுடன், உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். கடன் விடயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபார பணிகளில் உள்ள நெருக்கடியும் குறைவதுடன், வழக்கு சார்ந்த விடயங்களில் பொறுமையாக இருக்கவும்.
வரவுகளால் சேமிப்பு அதிகரிப்பதுடன், பெண்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகளும் விலகுமாம்.

தனுசு
புதன் நட்சத்திர பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், உங்களுக்கு இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீர்வதுடன், அரசு பணிகளிலிருந்து வந்த கால தாமதம் குறையுமாம்.
விவசாய பணிகளில் மேன்மை, கல்வி பணிகளில் மாற்றம், விளையாட்டு விடயத்திலும் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்குமாம்.
உடல் ஆருாக்கியத்தில் முன்னேற்றம் இருப்பதுடன், உத்தியோகப் பணியில் புதுவிதமான சிந்தனையும் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவும் கிடைக்கும்.
கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |