BSNL பேன்சி நம்பர் விற்பனை! ஒரு நம்பரின் விலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான BSNL தமிழ்நாட்டிற்குள் பயன்படுத்துவதற்கான ஃபேன்ஸி எண்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
BSNL ஃபேன்ஸி நம்பர்
BSNL ஃபேன்ஸி நம்பரானது ரூ.2000 முதல் ரூ.50,000 வரை 20 எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மின் ஏலத்துக்கான இணையதளத்தின் வழியாக வாங்கிக் கொள்ள முடியுமாம்.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) தமிழ்நாடு வட்டத்தில் இந்த பிரீமியம் ஃபேன்சி நம்பர்கள் கிடைக்கும்.
20 பேன்சி எண்களையும் அவற்றின் விலையையும் பிஎஸ்என்எல் தனது ஏல வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. எண்களின் விலை குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் ஆரம்பமாகிறது. அதிகபட்சமாக ரூ. 50,000 வரை ஃபேன்சி எண்கள் விற்பனைக்கு உள்ளன.
எவ்வாறு வாங்குவது?
eauction.bsnl.co.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி, விருப்பனமான நம்பரை தேர்வு செய்து பதிவு கட்டணத்தைத் செலுத்த வேண்டும்.
பதிவுக் கட்டணத்தை பின்னர் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். தேர்வு செய்த எண்ணிற்கு குறைந்தபட்ச ஏலத்தொகையையும் குறிப்பிட வேண்டும். அதிக தொகை கொடுப்பவருக்கு குறித்த எண், சில நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.
BSNL ஃபேன்ஸி எண்களும், அதன் விலையும்
பிஎஸ்என்எல் ஃபேன்சி நம்பர் | ஆரம்ப விலை |
9482194822 | ரூ.2,000 |
8762060000 | ரூ.3,000 |
9483993849 | ரூ.3,000 |
8277111999 | ரூ.4,000 |
9481020304 | ரூ.5,000 |
9483070707 | ரூ.5,000 |
9481801008 | ரூ.5,000 |
9483118311 | ரூ.5,000 |
9480301111 | ரூ.7,000 |
8762812345 | ரூ.7,000 |
8277234567 | ரூ.10,000 |
8762762762 | ரூ.10,000 |
8277582775 | ரூ.10,000 |
8277200000 | ரூ.13,000 |
8277155555 | ரூ.15,000 |
8277444444 | ரூ.20,000 |
8277511111 | ரூ.20,000 |
8277111111 | ரூ.22,000 |
8277177777 | ரூ.25,000 |
8277199999 | ரூ.50,000 |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |