அண்ணனை மாடியிலிருந்து கீழே தள்ளிய தம்பி... கொடூரத்தின் உச்சத்திற்கு காரணம் என்ன?
சொத்து தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி ஒருவர் அண்ணனை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி. இவருக்கும் இவரது தம்பி துரை சிங்கத்திற்கு இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது.
இதனால் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், இவர்களது வழக்கு நிலுவையில் காணப்படுகின்றது. இந்நிலையில் துரை சிங்கம் வீட்டின் மேல் தளத்தல் மழைநீர் வெளியேற தகர கூரை அமைத்துக் கொண்டிருந்த வேளையில்ஈ திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டின் மேல்தளத்தில் இருந்து ரத்தினசாமியை வீட்டின் மேல் கூறையிலிருந்து கீழே இருந்த கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் மீது ரத்தினசாமி விழுந்து தண்டுவடத்தில் படுகாயமடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தம்பி துரைசிங்கத்தினை கைது செய்த பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |