கூல்டிரிங்ஸ் வாங்கி தருவதாக அழைத்துச் சென்ற அண்ணன்.... கதறிக்கொண்டு வந்த 10 வயது சிறுமி கூறிய உண்மை
தமிழகத்தில் தங்கை முறை உள்ள சிறுமியை கடத்திச் சென்று மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் ராஜா. கார் டிரைவராக இருக்கும் இவர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பெரியம்மா மகளான 10 வயது தங்கை இருந்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று சிறுமியை கூல்டிரிங்ஸ் வாங்கித்தருவதாக அழைத்துச்சென்ற ராஜா தனியாக வருவதை அவதானித்த உறவினர் சிறுமியை எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு ராஜா தனக்கு தெரியாது என்று பதிலளித்ததால், பதறிப்போன பெற்றோர்கள் அவனியாபுரம் காவல்நிலையத்தல் புகார் அளித்துள்ளனர்.
ராஜாவிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது தனக்கு தெரியாது என்றே பதிலளித்துள்ளார். இந்நிலையில் அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல்நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி ஒருவர் தனியாக அழுதுகொண்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
அதன்பின்பே ராஜா செய்த காரியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆம், கூல்ரிங்கில் மயக்கமருந்து கலந்து கொடுத்து வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாமல் சிறுமி விழித்துக்கொண்டதால் பதட்டமடைந்த ராஜா சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்பு அப்பகுதியில் கதறி அழுது கொண்டிருந்த சிறுமியை கண்ட அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து காரியாபட்டி ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.