viral video: தாய் பாசத்தை மிஞ்சும் அண்ணனின் செயல்... மனதை உலுக்கும் காட்சி
தனது தங்கையை தாய் போல் பாசமாவும் தந்தையை போல் பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்ளும் அண்ணான சிறுவனின் மனதை நெகிழவைக்கும் செயல் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே உலகில் சுயநலமற்ற அன்பை வெளிப்படுத்துபவர்களை பார்ப்பது மிகவும் அரிது. தன்னை இழந்தாலும் இன்னொரு உயிர் வாழ வேண்டும் என நினைக்கும் குணம் தாய்க்கு மட்டுமே இருக்கும்.
எந்த சுயநலமும் இன்றி தன் பிள்ளைக்காக தன்னையே வருத்திக்கொள்ளும் குணம் தாய்க்கு இருப்பதால் தான் தாய் பாசத்துக்கு இவ்வுளகில் தனி மரியாதை இருக்கின்றது.
ஆனால் தாய் பாசத்தையும் மிஞ்சிய அன்பை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கொடுக்க கூடிய நல்ல உள்ளங்களுடம் இவ்வுளகில் இருக்கத்தான் செய்கின்றது.
அதனை பறைசாற்றும் வகையில் தனது தங்கையை தாய்க்கு நிகராக கவனித்துக்கொள்ளும் ஒரு சிறுவனின் மனதை நெகிழ வைக்கும் செயல் அடங்கிய காணொளி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
அம்மாவின் அன்பையும் அப்பாவின் பாதுகாப்பையும். ஒரே இடத்தில் பெற முடியுமானால் அது அண்ணனிடம் மட்டுமே pic.twitter.com/jY4lsyMaTf
— Rajini (@rajini198080) November 2, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |