கொடிய விஷமுள்ள ஆக்டோபஸை கையில் எடுத்த சுற்றுலாப் பயணி! பதறவைக்கும் காணொளி
பிலிப்பைன்ஸில் விடுமுறைக்காக சென்றிருந்த போது, உலகின் மிகவும் விஷமுள்ள கடல்வாழ் உயிரினங்களில் ஒன்றான நீல வளையம் கொண்ட ஆக்டோபஸை பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர் அறியாமல் கையாண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரையில் சுற்றித்திரிந்த சிறிய அளவிலான ஆக்டோபஸ் ஒன்றைப் இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஆண்டி மெக்கானெல் என்பவர் கையில் எடுத்து விளையாடியதுடன் அதனைப் படம்பிடித்துச் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆனால் அந்த உயிரினம் உலகிலேயே அதிக நச்சுத்தன்மை கொண்ட நீல வளைய ஆக்டோபஸ் என்பதும், அது கடித்திருந்தால் அவர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்திருக்கக் கூடும் என்பதும் அதனுடன் விளையாடும் போது அவர் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் பதிவில் குறிப்பிடுட்டுள்ளார்.
இந்த ஆக்டோபஸின் எச்சில் சுரப்பிகளில் இருக்கும் டெட்ரோடோடாக்சின் என்ற நச்சுப்பொருள் மனிதனின் நரம்பு மண்டலத்தை முடக்கி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி சில நிமிடங்களிலேயே மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்ப்பதற்கு சிறியதாகவும் அழகாகவும் காணப்படும் இந்த ஆக்டோபஸ் கடித்தால் ஆரம்பத்தில் வலி தெரியாது என்பதால் அந்த ஆபத்தை எவரும் எளிதில் உணர முடியாது. இந்த காணொயானது கடல் உயிரினங்கள் பற்றி சரியாக தெரியாமல் அதை விளையாட்டாக நினைப்போருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |