முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க ஆசையா? அப்போ இந்த pack போடுங்க
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும்.
அந்த சருமத்திற்கு ஏற்றார் போன்று பராமரித்தால் புத்துணர்ச்சியாகவும், பொலிவாகவும் இருக்கும். சந்தையில் ஒவ்வொரு சருமத்திற்கு ஏற்றால் போன்று ஃபேஸ் பேக், கிரீம் விற்கப்படுகிறது.
சிலர் இது தெரியாமல் கடைகளில் இருக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொழுது பாதிப்பு இரட்டிப்பாக இருக்கும். அதில் உள்ள சில பொருட்கள் எந்த வகையான சருமமாக இருந்தாலும் அதற்கு பொருத்தமாக அமையும்.
நாம் சந்தையில் வாங்கும் பொருட்களை விட வீட்டில் செய்யும் பேக்களால் கிடைக்கும் பலன்கள் நிரந்தரமாக இருக்கும்.
அப்படியாயின், வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க கூடிய ஒரு ஃபேஸ் பேக் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
முகத்தை கழுவிய பிறகு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சிறிது நேரம் முகம் சோர்வாக இருந்தால் சோர்வு இருக்கும். கலை இழந்தால் காணப்படும் அப்படிப்பட்ட முகத்தை கலையுடனும், புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் மாற்றும்.
தேவையான பொருட்கள்
- காபித்தூள்- ஒரு ஸ்பூன்
- தேன்- ஒரு ஸ்பூன்
- எலுமிச்சைப்பழம்- ஒரு ஸ்பூன்
- புளித்த தயிர்- ஒரு ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில், காபித்தூள், தேன், புளித்த தயிர், எலுமிச்சைப்பழச்சாறு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
முகத்தை கழுவி நன்றாக துடைத்த பின்னர், இந்த பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
குறைந்தது 15 - 20 நிமிடம் வரை இதை வைத்து இருக்கலாம்.
இறுதியாக முகத்தை கழுவி பாருங்கள். எவ்வளவு சோர்வான முகமாக இருந்தாலும் பிரகாசபுத்துணமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை போடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |