முதலிரவு அறைக்கு சென்ற புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட வயிறுவலி... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி
திருமணமாகி முதலிரவு அறைக்குள் சென்ற புதுப்பெண்ணிற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் மறுநாளே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான மறுநாளே குழந்தையா?
தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 26ம் தேதி உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த பின்பு முதலிரவு அறைக்கு மணப்பெண்ணை உறவினர்கள் அனுப்பிவைத்த நிலையில், திடீரென வயிறுவலியால் துடித்துள்ளார்.
உடனே செய்வதறியாது திகைத்த புதுமாப்பிள்ளை உடனே புதுமனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சனெ்றுள்ளார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் குறித்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், இது பிரசவ வலி என்றும் கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.
தொடர்ந்து பெண் குழந்தையும் பிறந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது தங்களது மகள் கர்ப்பமாக இருப்பது தெரியும் என்றும், அவரது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக குறித்த திருமணத்தை அவசர அவசரமாக செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாப்பிள்ளை வீட்டார் சண்டையிட்டு பெண்ணை ஏற்காமல் கிளம்பியுள்ளனர். தனது குழந்தையுடன் புதுப்பெண் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |