தனது திருமணத்தில் மணமகள் செய்த தரமான சம்பவம்: வருத்தத்துடன் திரும்பிய முன்னாள் காதலர்கள்! வைரலாகும் வீடியோ
தன் முன்னாள் காதலர்களை திருமணத்திற்கு அழைத்து பழிவாங்கிய மணப்பெண் தொடர்பிலான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில வைரலாகி வருகிறது.
பொதுவாகவே திருமணம் என்று வந்தாலே பல்வேறு சண்டை, சச்சரவுகள், குதூகலம் சந்தோஷம், பிரிவு என எல்லாமே அடங்கியிருக்கும் இவ்வாறு நடக்கும் சம்பவங்களில் வித்தியாசமான விநோதமான சம்பவங்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.
அவ்வாறு இன்றும் ஒரு வீடியோ காட்சி படும் வைரலாகி வருகிறது.
பழிவாங்கிய மணமகள்
சீனாவின் Hubei மாகாணத்தில் கடந்த 8ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பொதுவாக காதலனோ காதலியோ தனது திருமணத்திற்கு முன்னாள் காதலன் காதலியை அழைப்பது மிகவும் குறைவு.
ஆனால், இந்த மணப்பெண் தன் திருமணத்திற்கு தான் காதலித்த அத்தனை முன்னாள் காதலர்களையும் வரவழைத்திருக்கிறார்.
இவ்வாறு வரவழைக்கப்பட்ட முன்னாள் காதலர்களுக்கு தனியாக Table of Ex Boyfriends என்ற இருக்கைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கு கூடி இருந்தவர்களை ஒரு நிமிடம் சிலிர்த்துப் பார்க்கும் சம்பவமாகியுள்ளது. அந்த மணப்பெண் தான் இப்போது எப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கார் என்பதை காட்டுவதற்காகவே அவர்களை வரவழைத்திருக்கிறார்.
அவர் நினைத்ததை போலவே, தன்னுடைய காதலி மணக் கோலத்தில் கணவருடன் இருப்பதைக் கண்டு முன்னாள் காதலர்கள் சிலர் வருத்தத்துடன் செல்கின்றர்.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.