தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மரணம்! அடுத்த நொடியே குடும்பம் எடுத்த முடிவு
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹீதல் என்பவருக்கு நரி என்ற கிராமத்தை சேர்ந்த விஷால் என்ற இளைஞருக்கும் இருவரது குடும்பத்தினரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மிக மும்முரமாக கவனித்து வந்தனர்.
ஆடல், பாடல் என உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் குதூகலமாக இருந்துள்ளனர்.
யாரும் எதிர்பாராத ஒரு அசம்பாவித சம்பவம் அங்கே அரங்கேறி நடந்துள்ளது.
எதிர்பாராத ஒரு அசம்பாவிதம்
மணப்பெண் ஹீதல் திடீரென அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
உடனே ஹீதலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஹீதலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்து மணமக்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தங்ககையை திருமணம் செய்த மணமகன்
அதே வேளையில் திருமண நாளில் இப்படி நடந்ததால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் உறவினர்கள் அனைவரும் திருமணம் நின்று விடாமல் நடக்க வேண்டும் என்றும் நினைத்தனர்.
அதன் பெண் வீட்டாரிடம் பேசி மணப்பெண் ஹீதலின் தங்கையை மணமகன் விஷாலுக்கு திருமணம் செய்து வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு ஹீதல் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்க, இறந்த மணப்பெண் ஹீதல் உடல் குளிர் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு விஷால் மற்றும் ஹீதல் சகோதரி ஆகியோரின் திருமணமும் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னர் ஹீதலின் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் அங்குவந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.