நமக்கு சோறு தான் முக்கியம்: மணமகன் காத்திருக்கட்டும்! மணமகளின் அசத்தலான காட்சி
திருமணம் என்றாலே சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் இருக்கும். இந்திய மணப்பெண்கள் பெரும்பாலும் மாப்பிள்ளை அழைப்பின் போதும், திருமண விழா தொடங்கும் வரையிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், மணப்பெண்கள் பசியுடன் இருப்பார்கள். சிலர் உணவைத் தவிர்த்து விடுவார்கள். அதில் உணவுப் பிரியர்களான மணப்பெண்கள், சாப்பிடுவதற்கான அடிபடை உரிமையை விட்டுக் கொடுப்பதாக இல்லை, ஆம் உணவைத் தங்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
அத்தகைய ஒரு வீடியோவில், ஒரு மணமகள் தனது திருமண நாளில் சீன உணவை ரசிப்பதைக் காணலாம். மணமகள் தனது திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாக்கில் நீர் வடியும் வகையிலான சீன சிற்றுண்டிகளை சாப்பிடுவதைக் காணலாம்! வீடியோவில், அவர் அதிக அளவில் நகைகளுடன் பழுப்பு நிற லெஹங்கா அணிந்துள்ளார். அவர் மேம்கப் கலையாமல் ஜாக்கிரதையாக உணவு உண்ணும் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி (Viral Video) வருகிறது.
மணமகள் வீடியோவைப் பகிர்ந்து, "மன்னிக்கவும் நான் உணவு மிகவும் விரும்புபவளாக இருக்கிறேன், என் மாமியார் கூட அதையே விரும்புகிறார்கள்" எனக் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகத்தில் (Social Media) வைரலாகி உள்ளது, மேலும் வீடியோ அதிக அளவிலான பாராட்டையும் பெற்றுள்ளது. கருத்துப் பிரிவில் இதயம் மற்றும் காதல் ஈமோஜிகள் நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். ஒரு பயனர் எழுதினார், ”ஒரு பெண் தனது குறும்புதனத்தை இழக்கக் கூடாது. வேடிக்கையை தொடர வேண்டும்.. ஏன் மணமகள் இல்லை !!” மற்றொருவர் எழுதினார், "இது உங்கள் சொந்த திருமணம் ஆனால் திருமண உணவு தான் முதல் முன்னுரிமை."
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        