கனவுகளோடு காத்திருந்த மணமக்கள்! உறவினர்களால் திருமண வீட்டில் ஏற்பட்ட களேபரம்! திகைத்து நின்ற பொலிசார்
உத்திர பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்று புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட சண்டை இறுதியில் கைகலப்பாக மாறி காவல்நிலையம் வரை சென்றுள்ளது.
இருவீட்டாருக்கும் இடையே போட்டி
உத்திர பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பின்பு அருகில் உள்ள மாதவ்பூரில் திருமணம் நடத்த இருவீட்டினரும் சம்மமதம் தெரிவித்த நிலையில், கடந்த 8ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது, மணமகளின் வீட்டினர் சிலர் மது போதையில் இருந்த நிலையில், மணமக்கள் புகைப்படம் எடுப்பதற்கு தயாராகிவந்துள்ளனர். அப்பொழுது மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே யார் முதலில் புகைப்படம் எடுப்பது என்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு இறுதியில் கைகலப்பாக மாறிய நிலையில், மணப்பெண்ணின் சகோதரி உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், காயம் பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொலிசார் இருவீட்டினரையும் சமாதானப்படுத்தியுள்ளார்களாம்.