மாலை நேர தேநீருடன் சூப்பரான ஸ்நேக்ஸ் பிரட் வடை: 10 நிமிடத்திலேயே செய்யலாம்!
மாலை வேளைகளில் வீட்டில் உள்ளவர்களுக்கு காபி, டீ கொடுக்கும் போது, அவர்களுக்கு ஒரு மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
புதிய புதிய ரெசிபிகளை செய்து அசத்து பெண்களுக்காகவே மிகவும் இலகுவான முறையில் பிரட் வடை செய்யலாம்.
இப்போது பிரட் வடை எவ்வாறு செய்யலாம் என்பதைப்பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட் - 3 துண்டுகள்
- பெரிய கேரட் - 1
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- புதினா - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி - 1/2 தேக்கரண்டி (துருவியது)
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- அரிசி மாவு/சோள மாவு/மைதா - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - 2 மேசைக்கரண்டி
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளை சிறிதாக கையில் துண்டுகளாக்கி போட வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள், துருவிய கேரட், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு, சீரகம், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் அரிசி மாவு/சோள மாவு/மைதா மாவை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பிசைந்ததை சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுத்தால்
சுவையான பிரட் வடை தயார்.