30 நொடிகளில் 195 முத்தங்கள்: பிரேசில் ஜோடி கின்னஸ் சாதனை!
பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த டாக்டர்களான ரெனாட்டோ பேமா கையா (32) மற்றும் அவரது காதலி நயாரா ரோபர்ட்டா (33) ஆகியோர், 30 நொடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.
கின்னஸ் சாதனை
கொரோனா காலத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்ட வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களின் காதல், ஒற்றுமை மற்றும் புரிதலை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். ரெனாட்டோவுக்கு கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருந்தாலும், மன உறுதியும் பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
இந்தச் சாதனையுடன் நிற்காமல், ஜப்பான் ஜோடி வைத்துள்ள ஒரு நிமிடத்தில் 277 முத்தங்கள் என்ற உலக சாதனையையும் முறியடிக்க இந்த ஜோடி தயாராகி வருவதாக தெரிவித்துள்ளர்.
Brazil man SETS WORLD RECORD with 195 KISSES in 30 seconds
— RT (@RT_com) July 10, 2026
Girlfriend’s expression BARELY CHANGES while he goes full rapid-fire
People say he’s ‘KISSING LIKE A WOODPECKER’ pic.twitter.com/5ABJOCIR0P
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |