IQ Test:ஆபத்தில் இருக்கும் இருவர்- 5 வினாடிகளில் உங்கள் உதவி யாருக்கு தேவை?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
ஆபத்தில் இருப்பவர் யார்?
அந்த வகையில், படத்தில் இருவர் பள்ளத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள். அதில் ஒருவருக்கு கண் பார்வை இல்லை. மாறாக இன்னொருவர் கையில் தொலைபேசியுடன் அதனை பார்த்தப்படி நடந்து செல்கிறார்.
உண்மையில் இருவரில் யார் ஆபத்தில் இருக்கிறார் என்பதனை 5 வினாடிக்குள் நாம் கண்டுபிடித்து உதவ வேண்டும். அப்படி உதவ வேண்டும் என்றால் இருவரில் யார் உண்மையில் ஆபத்தில் இருக்கிறார்? கொடுக்கப்பட்ட நேரத்தில் ஆபத்தில் இருப்பவரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஆபத்திலுள்ளவர் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- இருவரில் கண் தெரியாதவர் தன்னிடம் உள்ள கோளை பயன்படுத்தி பள்ளத்தை கண்டுபிடித்து விடுவார். அதே சமயம், கையில் தொலைபேசியுள்ளவருக்கு முன்னால் என்ன இருப்பது என தெரியாது. அப்படியாயின் உண்மையில் ஆபத்தில் இருப்பவர் B எழுத்தில் உள்ளவர் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |