மூளையை உண்ணும் அமீபாவால் சிறுவன் உயிரிழப்பு.. மனிதர்களை எவ்வாறு பாதிக்கும்?
கேரளாவில் 15 வயது சிறுவன் ஒருவன் மூளையை உண்ணும் அமீபாவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் ஆலப்புழா பூச்சாக்கல் பகுதியைச் சேர்ந்த ஷாலினி மற்றும் அனில்குமார் தம்பதியரின் மகன் குருதத்(15). கடந்த ஞாயிற்று கிழமை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் இறப்பிற்கு அவர் ஓடையில் நீந்தியபோது மூளையை உண்ணும் அமீபா அவரது மூக்கு வழியாக சென்று பாதிப்பை ஏற்படுத்தியது தான் என்று கூறப்படுகின்றது.
உயிரை பறிக்கும் அமீபா
Naegleria என்பது ஒரு சுதந்திரமாக வாழும் அமீபா ஒரு செல் உயிரியாகும். இவை சூடான நன்னீர் அதாவது ஏரிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் மண்ணில் காணப்படுமாம்.
இந்த அமீபா வகையில் Naegleria fowleri என்பது மட்டுமே மனிதர்களை பாதிக்கின்றது. இவை நாம் ஏரி, ஆறு, நீச்சள் குளம் இவற்றில் நீருக்கடியில் தலையை வைக்கும் போது, இவை மூக்கு வழியாக மனிதர்களின் மூளைக்கு சென்று திசுக்களை அழித்து, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகின்றது.
தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்கு பின்பே அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுளிகள் ஒன்று முதல் 12 நாட்களுக்குள் தொடங்கலாம். பாதிப்பு தெரிந்தவுடன், 5 நாட்களில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது. சில நோயாளிகள் 18 நாட்களில் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
2017ம் ஆண்டு ஆலப்புழாவில் இந்த நோய் பதிவான நிலையில், இதன் அறிகுறிகளான தலைவலி, காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் ஏற்படும்.
பிந்தைய அறிகுறிகளாவான கழுத்து இறுக்கம், குழப்பம், கவனமின்மை, வலிப்பு, மாயத்தோற்றம், கோமா இவை ஏற்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |