விபத்தில் கோமாவிற்கு சென்ற சிறுவன் - ஒரு வீடியோவால் கண்விழித்த அதிசயம்
கார் விபத்தில் சிக்கிய ஒரு சிறுவன் தன் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனுப்பிய வீடியோவை கேட்டு கண்விழித்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
55 நாட்கள் கோமாவிலிருந்த சிறுவன்
சீனாவின் Hunan மாகாணத்தைச் சேர்ந்த Liu Chuxi என்னும் 8 வயது சிறுவன் கார் விபத்தொன்றில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளான்.
அவனை பார்த்த மருத்துவர் அந்த சிறுவன் இனிமேல் கண்வழிக்க மாட்டான் கண்விழிக்க வாய்ப்பே இல்லை என கூறி உள்ளார்.
அந்த நேரத்தில் இன்னுமொரு மருத்துவர் Liuவுக்கு பிடித்த இசை, அவனுக்கு பழகிய சத்தங்களை கேட்கவைத்தால் அவன் கோமாவில் இருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது எனப்படுகின்றது.

இதனால் இந்த சிறுவனின் தாயார் Liu படித்த பள்ளியில் ஒலிக்கும் சத்தங்களை பதிவு செய்து மகன் படுக்கையருகே வைத்து அதை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்துள்ளார்.
பின்னர் அந்த சிறுவனுடன் படிக்கும் சக மாணவர்கள் பேசுவது போல ஒரு காணொளியையும் பதிவு செய்து அதையும் சிறுவன் அருகில் ஒலிக்கச் செய்துள்ளார்.
’Liu எழுந்திரு, விளையாடப்போகலாம் என ஒரு நண்பன் கூற, உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் Liu, நான் பேசுவது உனக்குக் கேட்டால் கண்களைத் திற என ஒரு தோழியும், பரீட்சை வருகிறது, வா சேர்ந்து படிக்கலாம் என மற்றொரு நண்பனும் கூற, 45 ஆவது நாள் தன் ஆசிரியரின் சத்தத்தைக் கேட்ட Liu மெல்ல புன்னகைத்துள்ளான்.

55ஆவது நாள் Liuவின் ஆசிரியர், வீட்டிற்கு வந்து இனி உனக்கு வீட்டுப்பாடமே தரமாட்டேன் என்று கூற, அவன் மெல்ல கண் விழித்து பார்த்துள்ளான்.
அவன் முழுமையாக குணமாக இன்னும் காலமாகலாம் என கூறப்பட்ட போதிலும் தாயின் முயற்ச்சியால் 55 நாட்களுக்குப் பிறகு தன் மகன் கண் விழித்துள்ளார். இதனால் தாய் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அவனுக்கு உதவியாக தொடர்ந்து அவனைப் பார்க்க வந்து அவனை உற்சாகப்படுத்திய அவனது ஆசிரியர், நண்பர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தாய் கண்ணீருடன் நன்றி கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |