ஹோட்டல் அறைக்குள் ஒன்றாக சென்ற காதல் ஜோடி.! திறந்து பார்த்த ஊழியர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி
பொறியியல் கல்லூரி மாணவியை, ஹோட்டல் அறையில் வைத்து காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதலனுடன் 21 வயது பெண்
மைசூர் ஹுன்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி(21)
இவர் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் நிலையில், அருகில் விடுதி ஒன்றினை எடுத்து தங்கியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை புக் செய்துள்ளனர்.
செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற ஆஷி, பல மணிநேரம் கடந்தும் திரும்பாததால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
சடலமாக கிடந்த காதலி
அவர்கள் உடனே இண்டர்காம் மூலம் அறையைத் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதில் இல்லாத நிலையில் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலீசார் வந்து அறையை திறந்து பார்த்தபோது, அபூர்வா சடலமாக கிடந்தார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனை தொடர்ந்து, ஆஷி வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
அபூர்வா மற்றும் ஆஷி இடையேயான காதல் உறவை அறிந்த அபூர்வாவின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
ஆனால், குடும்பத்தை மீறி ஒருவரை ஒருவர் சந்தித்த நிலையில் இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் காதலனிடம் தீவிர விசாரணையை பொலிசார் மேற்ககொண்டு வருகின்றனர்.