மருத்துவமனையில் போண்டா மணி! உருக்கமாக பேசிய வைகைப்புயல் வடிவேலு

Fathima
Report this article
நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவுகளுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்வேன் என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
நடிகர் போண்டாமணி
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர் வலம் வந்தவர் போண்டாமணி. இவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிக மோசமான நிலையில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.
மேலும், பிரபல நடிகர் பெஞ்சமின் போண்டா மணிக்கு உதவுமாறு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானதையடுத்து, பலர் போண்டா மணிக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.
நடிகர் வடிவேலு பேட்டி
இந்நிலையில், இன்று திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் வடிவேலு.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மாமன்னன், நாய் சேகர் ரிட்டன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் மக்கள் எதிர்பார்ப்பதைவிட காமெடி அதிகம் இருக்கும். மருத்துவமனையில் உள்ள நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற அளவு உதவியை செய்வேன் என்று தெரிவித்தார்.
