12,000 வருச மர்மம் அவிழ்ந்தது... ஆதிர வைத்த ஆராச்சியாளர்கள்! இன்னும் பல ஆச்சரியங்கள்
துருக்கியில் 12,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சுமேரியர்கள், அசிரியர்கள், ரோமானியர்கள் உட்பட சுமார் 25 நாகரிகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாக கூறப்படும் பொங்குளு டர்லா என்ற தொல்லியல் தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கே இதற்கு முன்பு வீடுகள், அரசு கட்டிடங்கள், கோயில்கள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், ஒரு லட்சம் பாசிமணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஒரு அடுக்குமாடி பொது கட்டடம் இருந்தது தொடர்பான தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று முறை இந்த கட்டடம் கட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தகவலை 15 பேர் கொண்ட குழுவை அகழ்வாராய்ச்சி பகுதியில் வழிநடத்தி வரும் தொல்லியல் துறை பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் எர்குல் கோடாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒரு முழு கட்டிடமும் தோண்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இவை மிகப் பெரிய அளவிலான கட்டமைப்புகள் என்றும் தெரிகிறது.
அதேபோல இவை குடியிருப்புக்காக பயன்படுத்தப்படாமல் தனி நபர் அல்லது குழுக்களால் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் நிலையில், இங்கே உள்ள மக்கள் எவ்வாறு இங்கே குடியேற தொடங்கினார்கள் என்பது பற்றிய ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.