viral video: நீல நிற பாம்பை பார்த்ததுண்டா? அழகை போன்றே ஆபத்தும் அதிகம்
பாம்பு வகைகளில் அரிதானதும், கொடிய விஷம் கொண்டதுமான நீல விரியன் பாம்புகளின் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக நீல விரியன் பாம்பு பார்பதற்கு பிரகாசமாகவும் அழகாகவும் இருந்தாலும் கொடிய விஷம் கொண்டது.
இதன் விஷம் கடுமையான இரத்தப்போக்கை உடலின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது.
கிழக்கு தைமூர் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுவதாக மாஸ்கோ உயிரியல் பூங்கா குறிப்பிடுகின்றது.
பாலி தீவில் பெரும்பாலானவர்கள் இந்த பாம்பிடம் கடி படுகிறார்கள். இதனால் அரிதாகவே இறப்பு நிகழும் என்றாலும், ரத்தக்கசிவு கடுமையான வலி மற்றும் வீக்கத்தை அனுபவிக்க வேண்டியிக்கும்.
இந்நிலையில் இந்த கொடிய விஷம் கொண்ம நீல விரியன் பாம்பு தனது குட்டிகளுடன் இருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இணையத்தில் பெரும்பாலானர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |