Viral Video: காத்திருந்த நாரையிடம் சிக்கிய மீன்... தப்பிக்க அரங்கேறும் போராட்டம்
நாரை ஒன்று மீனை வேட்டையாட சில நொடிகள் காத்திருந்து கடைசியில் வேட்டையாடி அதனை விழுங்கும் காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை மீனை வேட்டையாடுவதற்கு சில நொடிகள் ஆயத்தமாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் மீனை பிடித்து தனது அலகில் வைத்திருந்த நிலையில், மீன் தப்பிப்பதற்கு பயங்கர போராட்டம் நடத்தியுள்ளது. கடைசியில் சரியான தருணம் பார்த்து நாரை மீனை மிகவும் லாவகமாக விழுங்கியுள்ளது.
மீன் நாரையின் தொண்டைக்குள் சென்றும் தனது போராட்டத்தினை விடாமல் துடித்துக் கொண்டே இருந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |