Viral Video: தம்மாத்துண்டு வாயில் இவ்வளவு பெரிய மீனா? நாரையின் வியக்க வைக்கும் காட்சி
நீல நிற நாரை ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்து அதனை உணவாக்கியதும், தொண்டைக்குள் சென்று மீன் துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் அசத்தல் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

தற்போது நீங்கள் காணும் காட்சியானது நம்பமுடியாத வகையில் இருக்கின்றது. நீல நிற நாரை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
நாரையின் வாய் அலகு ஊசி போன்று காணப்படும் நிலையில், அது உணவாக்க பிடித்த மீன் அகலமாக இருக்கின்றது. மீனை குறித்த நாரை எவ்வாறு சாப்பிடும் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கும் எழும்பும் நிலையில், நாரையானது தனது செயலால் பிரமிக்க வைத்துள்ளது.
ஆம் குறித்த மீனை மிகவும் லாவகமாக விழுங்கி உணவாக்கியுள்ளது. மீன் தொண்டைக்குள் சென்று துடிதுடிக்கும் நிலையையும் காணொளியில் காணமுடிகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |