Viral Video: கஷ்டப்பட்டது கடைசியில் இப்படி வீணாய் போயிடுச்சே! நாரையின் பரிதாப காட்சி
கருப்பு நிற நாரை ஒன்று தான் பிடித்த மீனை உணவாக்க முயற்சித்த நிலையில், இறுதியில் நூலிழையில் மீன் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி பார்வையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த கருப்பு நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனைப் பிடித்து உணவாக்க முயற்சிக்கின்றது. ஆனால் இரண்டு முறை முயற்சித்து மீனை குறித்த நாரையினால் விழுங்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில் மீனை விழுங்க முடியாமல் தவித்த நாரையிடமிருந்து மீன் எஸ்கேப் ஆகியுள்ளது. இக்காட்சியினை சிறிதும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தினையே கொடுத்துள்ளது.
குறித்த காட்சி பார்வையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணமாகவே இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |