கண் திருஷ்டிக்காக கருப்பு கயிறு கட்டும் இந்த 4 ராசிக்காரர்கள்: உங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் ஆபத்து இதுதான்!
நம்மில் பலர் கைகளிலும் கால்களிலும் கருப்பு நிறத்தில் கயிறு கட்டியிருப்பது வழக்கம். இது எதற்காக என்றுக்கேட்டால் அவர் மேல் விழும் கெட்ட சக்திகளை தூரத்தில் நிறுத்தி வைப்பதற்காகத் தான் என்று சொல்வார்கள்.
மேலும், இந்தக் கருப்பு நிறக் கயிறை கட்டியிருப்பதால் பல எதிர்மறை சக்திகளிடமிருந்து உடலை பாதுகாப்பதற்காக என்று சொல்வது ஐதீகம். இது பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.
இந்தக் கருப்பு நிறக் கயிறை பெண்கள் மற்றும் ஆண்கள் கால்கள் அல்லது கைகளிலும் குழந்தைகளுக்கு இடுப்பிலும் கட்டுவார்கள்.
இதில் சில நன்மைகள் இருந்தாலும் ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிறக் கயிறோ அல்லது கருப்பு நிற ஆடையோ அணித்தால் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படுமாம். அந்த 4 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் செவ்வாய். செவ்வாய் கிரகத்திற்கு கருப்பு நிறம் பிடிக்காத நிறமாம் சிவப்பு நிறம் தான் பிடித்த நிறம். இந்த ராசிக்காரர்கள் கை, கால்களில் கருப்பு கயிறு கட்டினால் வாழ்க்கையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க கூடும். வாழ்க்கையில் சில தோல்விகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறக் கயிறை கட்டிக் கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷபராசிக்கர்களுக்கு அதிபதியாக இருப்பவர் சுக்கிரன் அவருக்கு பிடித்த நிறம் வெள்ளை. அதனால் கருப்பு நிறக்கயிறை கட்டியிருப்பவர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் பல மோசமான விளைவுகளை சந்திப்பார்கள். வேலைகளிலும் பல தடைகளை சந்திப்பீர்கள். திருமணத்தில் பல தடைகள் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் வியாழன். இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு அணியும் போது வியாழன் அதிக கோபத்தில் இருப்பாராம். இதனால் உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளையும் கொடுப்பாராம். வேலையிலும் அதிக சிக்கல்களை சந்திப்பார்கள் அதனால் தனுசு ராசிக்காரர்கள் கருப்பு நிறக் கயிறுக்கு பதிலாக மஞ்சள் நிறக் கயிறும் அதே நிறத்தில் ஆடைகளை அணிவதும் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருக்கும் செவ்வாய்க்கு கருப்பு நிறம் ஏற்ற நிறம் இல்லை. அதனால் இந்த ராசிக்காரர்களும் கருப்பு நிறம் அணியவே கூடாது. அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் எதிர்மறையான பலன்கள் வந்துக் கொண்டே இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் தோல்வியில் தான். கருப்பு நிறக் கயிறை கட்டிக் கொண்டால் நிதிப் பிரச்சினை, நோய் நொடிகள் என்பனவந்து சேரும்.