அறிமுகமாகியுள்ள கருப்பு நிற நூடுல்ஸ்! சாப்பிடத்தயாரா, எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ காட்சி
உணவு முறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்றதுபோல ஒவ்வொரு விதமாக இருக்கும். பொதுவாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் வாழை இலையை விரித்து அறுச்சுவைகளையும் ஒரு இலையில் வைத்து உண்பார்கள்.
அதுவே வேறு வெளிநாடுகளில் புதுபுது உணவுகளை கண்டுப்பிடித்து வாய்க்குள் நுழையாதபடி பெயர்களை வைத்து பிரபல்யமாக்கி வருகிறார்கள்.

பொதுவாகவே நாங்கள் விரும்பி சாப்பிடும் ஆசிய உணவுகளில் நூடுல்ஸ் ஒன்றாகும். அந்த நூடில்ஸின் நிறம் பட்டர் நிறத்தில் இருக்கும்.ஆனால் ரோட்டுக் கடையொன்றில் கருப்பு நிறத்தில் நூடில்ஸை விற்பனை செய்யும் காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
கருப்பு நூடுல்ஸ்
தாய்லாந்தின் ஒரு தனித்துவமான தெரு உணவு கடையில் கருப்பு நூடுல்ஸை விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நூடில்ஸ் கிழக்கு ஆசிய நாட்டு மக்கள் மிகவும் ரசித்து உண்கிறார்கள்.

குறித்த கருப்பு நூடுல்ஸ் சாதாரண நூடுல் மாவுடன் தனித்துவமான கருப்பு ஸ்க்விட் மை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், தாய்லாந்தில் ஒரு பெண் விற்பனையாளர் கருப்பு ஆரவாரத்தை சமைப்பதைக் காட்டுகிறது.
அந்த ஹேஷ்டேக்கில் உள்ள இடத்தின்படி, அந்த வீடியோ பாங்காக்கில் படமாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பிற பொருட்களுடன் ஒரு பாத்திரத்தில் வழக்கத்திற்கு மாறான கருப்பு நூடுல்ஸை பெண் வறுத்ததைக் வீடியோவில் காணலாம்.

இந்த கருப்பு நிற நூடில்ஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு வருமா என மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புடன் பெரும் வைரலாகி வருகிறது.