Black chickpea curry: கூந்தல் உதிர்வு முதல் ரத்த அழுத்தம் வரை... தீர்வு கொடுக்கும் கருப்பு கொண்டைக் கடலை குழம்பு
கருப்பு கொண்டைக்கடலையில் அதிகளவான புரோட்டீன் காணப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் வங்கு வகிக்கின்றது.
கருப்பு கொண்டைக்கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாத்து அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
அதில் காணப்படும் புரோட்டின் செறிவு காரணமாக உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.
கருப்பு கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் உள்ள ஹூமோகுளோபின் அளவை உயர்த்த பெரிதும் உதவுகின்றது.
சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும் ஆற்றலுடன் செயல்ப்படுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நாவூரும் சுவையில் அசத்தல் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது -2 தே.கரண்டி
மல்லித்தூள் - 2 தே.கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி
சீரகத்தூள் - அரை தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி
மிளகுத்தூள் - அரை தே.கரண்டி
தேங்காய் எண்ணெய் - 5 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரி பருப்பு - 10
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
சோம்பு - கால் தே.கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
செய்முறை
முதலில் கருப்பு கொண்டைக்கடலையை குறைந்தது 8 மணி நேரம் வரையில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரில் கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டு நான்கு விசில் வரும் வலையில் வேக வைத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து அரைக்கக் தேவையான ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பா்த்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள், சீரகத்தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரையில் கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து தக்காளியை நன்கு குழையும் படி விட வேண்டும்.
பின்னர் அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீரோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த தேங்காய் விழுது உப்பு ,கரம் மசாலா தூள் , மிளகுத்தூள் சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் வேகவிட வேண்டும்.
குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் மல்லித்தழையை தூவி இறக்கினால் அவ்வளவு அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |