இலங்கையின் சிறந்த சுற்றுலா தளமாக மாறும் Reecha! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?
இயற்கை எழில் கொஞ்சும் அழகில் இலங்கை கிளிநொச்சி பகுதியில் யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள 'றீ(ச்)ஷா' ஒருங்கிணைந்த பண்ணையின் தெரியாத பல சுவாரசிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இயற்கையின் அதிசயம் றீ(ச்)ஷா பண்ணை
யாழ் இயக்கச்சிப் பிரதேசத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படும் இந்த பண்ணையைக் குறித்து பலரும் அறியாத நிலையில், இங்கு எவ்வாறு செல்ல வேண்டும்? உள்ளே நமக்கு தெரியாத என்னென்ன விடயங்கள் காணப்படுகின்றது என்பதை விளக்கும் பதிவே இதுவாகும்.
இயற்கை மாறாத உணவுகள் மட்டுமின்றி, தமிழ் மொழிக்கும் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இலங்கையில் கிளிநொச்சி பகுதியில் காணப்படும் இந்த Ree Cha பண்ணை மிகப் பிரபலமான சுற்றுலா தளமாக தற்போது காணப்படுகின்றது.
பண்ணையை சுற்றிப் பார்த்து அனுபவிக்க வசதியாக பண்ணை முழுவதும் பயணம் செய்யக்கூடிய பாதைகள், பாலங்கள், சக்கர நாற்காலி பயணம் செய்யக்கூடிய வகையிலான வசதிகள் என்று பல விடயங்களை இங்கே உள்ளது.
மேலும் இந்த தளத்திற்கு செல்வதற்கு சில நிபந்தனைகளும் காணப்படுகின்றது. அதாவது ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள், வெளியே இருந்து உணவுகளை உள்ளே எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லையாம்.
காரணம் இங்கு பாரம்பரிய சுவையுடன் மட்டுமின்றி, பாரம்பரிய சமையலையும் கொண்டுள்ளனர். 150 ஏக்கர் தென்னந் தோட்டத்தில் நிறுவப்பட்ட இந்த பண்ணைக்கு சென்று வந்தாலே பழைய நினைவுகள் நம் மனதில் அலைபாயும்.
றீ(ச்)ஷா உணவகத்தில் உணவுகள் ருசியானது மட்டுமின்றி அவர்களின் கவனிப்பும் நம்மை மெய்சிலிர்க்கவைத்துவிடும். குடும்பமாக வருகைதந்து தங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.
அந்தவகையில் இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.