ஆதாரத்தை நானே கண்ணில் பார்த்தேன்.. இமான், சிவகார்த்திகேயன் சர்ச்சையில் பிஸ்மி பகீர்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் பிரச்சினையில் ஆதாரத்தை நானே பார்த்தேன் என்று பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன்
இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போன்று வலம்வந்த நிலையில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர்.
இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று இமான் கூறிய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த பிரச்சினைக்கு இதுவரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவே இல்லை. ஆனால் இமானின் முன்னாள் மனைவி சிவகார்த்தியனுக்கு சப்போர்ட் செய்து பேட்டி கொடுத்திருந்தார்.
பிஸ்மி கூறிய உண்மை
அதன் பின்பு சிவகார்த்திகேயன் எந்தவொரு பிரச்சினையும் நடக்காதது போன்று தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படமும் பல கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பிய நிலையில், தற்போது பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய உண்மை அனைவரையும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிஸ்மி கூறுகையில், "டி.இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை முதலில் நான் வெளிக்கொண்டு வந்தது நான் தான்... ஆனால் இதனை சிவகார்த்திகேயன் இன்னும் ஏன் மறுக்கவில்லை... சிவகார்த்திகேயன் - இமான் விவகாரத்தில் ஆதாரத்தை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன்" என்று கூறி அதிர வைத்துள்ளார்.
பிஸ்மி இவ்வாறு கூறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்ன ஆதாரமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |